search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெரேசா மே"

    முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பிரிட்டன் முன்னாள் மந்திரி போரிஸ் ஜான்சன் மீது அவர் சார்ந்த கன்சர்வேடிவ் கட்சி விசாரணையை தொடங்கியுள்ளது. #BorisJohnson #TheresaMay #ConservativeParty
    லண்டன்:

    பிரிட்டன் வெளியுறவு மந்திரியாக பணியாற்றி சமீபத்தில் ராஜினாமா செய்த போரிஸ் ஜான்சன், நாளிதழ் ஒன்றுக்கு சமீபத்தில அளித்த பேட்டியில் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவை அஞ்சல் பெட்டியுடன் ஒப்பிட்டு பேசினார். மேலும், வங்கிக்கொள்ளையர்கள் போலவும், புர்கா அடக்குமுறை சார்ந்தது எனவும் அவர் கூறியிருந்தார்.

    அவரது கூற்று மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் தெரேசா மே இதனை கண்டித்திருந்தார். இந்நிலையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி போரிஸ் ஜான்சன் மீது விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழு அமைத்துள்ளது. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஜான்சன் மீது கடுமையான நடவடிக்கையை தெரேசா மே எடுக்கலாம் என தெரிகிறது.

    பிரெக்ஸிட் விவகாரத்தில் தெரேசா மேவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    சொந்த கட்சியினரே கிளர்ச்சியை தொடங்கிய நிலையில், என்னை ஆதரிக்காவிட்டால் பிரெக்ஸிட் ஒருபோதும் நிறைவேறாது என எதிர்ப்பாளர்களுக்கு பிரிட்டன் பிரதமர் தெரேசா மே எச்சரிக்கை விடுத்துள்ளார். #Brexit
    லண்டன்:

    ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்த பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரெக்ஸிட் விவகாரத்தை கையாள நான் சரியான நபர் இல்லை என தெரிவித்த டேவிட், ஐரோப்பிய ஒன்றியத்துக்காக பிரிட்டன் பல விஷயங்களை எளிதாக விட்டுக்கொடுக்கிறது என குற்றம் சாட்டியிருந்தார்.

    டேவிட் ராஜினாமா செய்த சில மணி நேரத்தில் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அரசிலும், ஆளுங்கட்சியிலும் முக்கிய இடத்தில் இருந்த போரிஸ் ஜான்சனின் ராஜினாமா பெரும் அரசியல் அதிர்வை ஏற்படுத்தியது. பிரெக்ஸிட் விவகாரத்தை தெரேசா மே கையாளும் முறையில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது.

    மேலும், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்கள் பலர் தெரேசா மே-வை வெளிப்படையாக விமர்சிக்க தொடங்கினர். இதனால், எரிச்சலடைந்த தெரேசா எதிர்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். 

    அதில், “என் பின்னாள் நின்று எனக்கு ஆதரவாக இருங்கள். இல்லையெனில் பிரெக்ஸிட் ஒருபோதும் நிறைவேறாது”என அவர் தெரிவித்துள்ளார்.
    பிரெக்ஸிட் விவகாரத்தில் டேவிட் டேவிஸ் இன்று தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், சிறிது நேரத்தில் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் பதவியில் இருந்து விலகியுள்ளார். #Brexit #BorisJohnson #UK
    லண்டன்:

    ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்த பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரெக்ஸிட் விவகாரத்தை கையாள நான் சரியான நபர் இல்லை என தெரிவித்த டேவிட், ஐரோப்பிய ஒன்றியத்துக்காக பிரிட்டன் பல விஷயங்களை எளிதாக விட்டுக்கொடுக்கிறது என குற்றம் சாட்டியிருந்தார்.

    டேவிட்டின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட பிரதமர் தெரெசா மே, டொமினிக் ராப்பை அந்த இடத்தில் நியமித்தார். இதனை அடுத்து சில மணி நேரத்தில் பிரிட்டன் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நிதி நடைமுறைகள் மற்றும் வர்த்தக தொடர்புகள் உள்பட்ட விவகாரங்கள் தொடர்பாக இறுதி முடிவெடுக்க வேண்டிய பிரிட்டன் நாட்டு மந்திரிகள் இருவரும் ராஜினாமா செய்துள்ள நிலையில், பிரெக்ஸிட் விவகாரம் திட்டமிட்டபடி முடிவுக்கு வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 
    ×